செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜன்னல்..(அடுத்தவர் குறை)

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

Think and react...
தாமஸ் ஆல்வா எடிசன் (தாயின் நம்பிக்கை)

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....

இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
இலவசம்

அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.
இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி...
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.
அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பி இருப்பார்கள்'' என்று கண்டு பிடித்திருப்பீர்களே...!''என்று எழுதியிருந்ததைப் பார்த்து உடன் கத்தினர்.
ஐயோ...! ''களவாணிப்பயலா'' அவன்....? என்று....
நீதி: ''இலவசம்'' யார் மூலமாக வந்தாலும் அது ஆபத்துத்தான்...!
வாய்க்குள்ள தண்ணீர் வைத்துக்கொள்

பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க முகத்தில் காயத்துடன் சென்றாள்.

டாக்டர்:என்னமா முகத்துல இவ்ளோ அடிப்பட்டிருக்கு??

பெண்:என் கணவர் டெய்லிகுடிச்சிட்டு வந்து என்ன அடிக்கிறார் டாக்டர்.

காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு டாக்டர் சொன்னார்:இனிமே உன் கணவன் குடிச்சிட்டு வந்தா வாய்ல்ல கொஞ்சம் தண்ணீரை ஊத்திக்கோ. முழுங்கிவிடாதே அவர் தூங்குற வரைக்கும் வாய்குள்ளே வச்சிறு.அடுத்த வாரம் என்னை வந்து பார்

ஒரு வாரம் கழித்து மிகவும் ப்ரஷ்ஷாக வந்தாள்.

பெண்:நீங்க சொன்ன மாதிரியே வாய்க்குள்ள தண்ணீய வச்சு இருந்தேன் என் கணவர் என்னை அடிக்கவே இல்ல டாக்டர்!!!!
நல்ல டெக்னிக்.. டாக்டர்!!!!!
ஆனா..... எப்படின்னு தான் புரியல?

.

டாக்டர்:: அது வேற ஒண்ணுமில்லம்மா!!!!!


.


.



.

.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.




நீங்க வாய திறக்காம இருந்தா எந்த பிரச்சனையும் வராது, அதுக்குதான் இந்த ஐடியா!!! என்றார்.

பெண்:!!!!!

திங்கள், 28 டிசம்பர், 2015

பலியாடு

ஒரு பண்ணையில் குதிரையும் ஆடும் நண்பர்களாக இருந்தன,
ஒருநாள் குதிரைக்கு உடல்நிலை சரியில்லாமல் கிடையில் விழுந்தது,
அதன் உரிமையாளர் மருத்துவரை அழைத்து வந்து பார்த்தார்,
மருத்துவர் விஷக்கிருமி பரவியுள்ளது மூன்று நாட்கள் மருந்து குடுக்கலாம் சரியாகவில்லை என்றால் குதிரையை கொன்று விடலாம்,
இல்லை என்றால் இதே நோய் மற்ற குதிரைகளுக்கும் பரவி விடும் என்றார், உரிமையாளரும் சரி என்றார்,
இதை கேட்டிக் கொண்டிருந்த ஆடு குதிரையிடம் சென்று நண்பா நீ எழுந்து நிக்க முயற்சி செய் இல்லையென்றால் நீ நிரந்தரமாக முடக்கப்படுவாய் என்றது, குதிரை எதற்கும் அசைந்தபாடில்லை,
மறுநாள் மருத்துவர் மருந்து கொடுத்தார், அப்போதும் ஆடு நண்பா ஏன் இப்படியே இருக்கிறாய் எழுந்து நடக்க முயற்சி செய்து பார் என்றது குதிரையிடம் எந்த மாறுதலும் இல்லை,
மூன்றாவது நாளும் மருத்துவர் மருந்து கொடுத்தார்,
அப்போதும் எந்த முன்னேற்றமும் இல்லை,
மருத்துவர் இனிபயனில்லை குதிரையை கொன்று விடலாம் என்றார், உரிமையாளரும் சரி என்றார்.
அப்போது ஆடு நண்பா இப்போது நீ எழுந்திருக்கவில்லை என்றால் நீ நிரந்தரமாக தூங்க வேண்டியதாகிரும் என்றது,
குதிரை மெதுவாக எழுந்து நின்றது,
நடந்தது, கொஞ்சம் கொஞ்சமாக ஓடியது பிறகு நன்றாக ஓடியது,
அனைவருக்கும் ஆச்சரியம்!
உரிமையாளர் மிக்க மகிழ்ச்சியாக என் குதிரை என் குதிரை தான் என்று பாராட்டினார்,
அந்த மகிழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து வைக்கவேண்டும் என்று,
அந்த ஆட்டை பிடித்து விருந்து போடுங்கள் என்றார்,
இதுபோலத் தான்,
ஒரு நிர்வாகத்தில் திறமை, கடுமையான உழைப்பு இருந்தும்,
அதை வெளிக்கொண்டு வந்த
சிலரின் ஆற்றல் அவர்களுக்கு பயன்படுவதில்லை,
மாறாக அவர்கள் பலியாடு ஆகின்றார்கள்.
பிரார்த்தனை

ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறு பட்டவர்கள், ஒரே நிறுவனத்தில் எரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.
அந்த தீவில் வெறும் புற்களும் புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..!
அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன.
அதை அவன் சாப்பிட்டான் ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான். பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான்.
அவனது ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான்.
தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.
முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தால் போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.
ஆனால் புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர்.
இப்படியாக ஒரு வாரம் கழிந்தது இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான்.
அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது. முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னு மொருவன் இன்னும் பசியாறாமல் கூட வேதனையில் வாடினான்..?
எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான், தன் நண்பன் ஓன்றுக்கும் உதவாதவன் கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை, ஒரு சிறு பிரார்தனையைக் கூட கடவுள் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதானல் அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!! படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா...!!
அப்போது அந்த படகு கிளம்ப தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!
ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது...!
அதற்கு அந்த மனிதன் சொன்னான் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார்.
என் நண்பனின் பிரார்தனை ஓன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஓன்று கூட பெற தகுதி இல்லாதவன் என்று சொன்னான்.
அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்...!!
உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஓன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்னையையும் நிறை வேற்றி வைத்தேன்.
அது மட்டும் அவன் கேட்க வில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.
அந்த மனிதன் கேட்டான் சொல்லுங்க அப்படி அவன் என்ன பிரார்த்தனையில் கேட்டான்? நான் அவனுக்கு கடமை ஏதாவது பட்டு இருக்கிறேனா என்று..?
அந்த குரல் மேலும், உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்..! வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன்...! ஆகவே என் பிரார்த்தனை அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றி வையுங்கள்..!! அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....! ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்..!
அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!
‪#‎கதையின்_நீதி‬: நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே எல்லாம் நமக்கு கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம்.
நம்மை நேசிப்பவர்களை யாராக இருந்தாலும் ஓதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்.

துன்பங்களே நம்மை வலுப்படுத்தும்

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராததிருப்ங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.ுஇதை புரிந்து கொண்டு நம்வாழ்க்கையை மகிழ்சியுடன் பயணம் செய்வோம்.
நிறத்தை நம்பாதே | அழகில் வீழ்ந்த மீன் |


ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன்  குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் சோமு, சிண்டு  என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது

ஏய் சிண்டு... என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா  இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து "ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கறுப்பாக இருக்கிறான்." அவன் குரலை நீ கேட்டிருகிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும்  குளத்துக்குள் வேகமாகச் சென்றன.

அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்ற போது  "பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது

கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு ? அதான்...




ஓ....! காகமா, அதால நமக்கு எந்த ஆபத்தும் இல்லே. உருவத்தை மட்டுமே வெச்சு ஒருத்தரைப் பற்றி தப்பா நினைக்கக் கூடாது என்று  அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் " இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம்." என கூறி சென்றது

அடுத்த நாள் வந்தது;  குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது; அதை பார்த்த மீன் குஞ்சுகள், " ஏய் அங்கே பாரு வெள்ளையா... " அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா கச்சிதமா இருக்கு.

அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள்; அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா?

கொக்குக்கு ஒரே கொண்டாட்டம் ;  ஓ! தொட்டுப் பாரேன்.

ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டினியா? என்றது.  மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன.





அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள் ; அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்!  ஆமாம்! என்று உறுதியடுத்து கொண்டன.

அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோசமாக வாழ்ந்தன.
 தாய்ப்பாசம்

👣👣👣 பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் 😢 விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. 🚫
👴 👵 பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக 👎 ஆற்றல் குறைந்து, 👉 👈 மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் ⏫ உயரமான 🌌 மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். ❗

❌ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள 🚻 அம்முதியோர்கள் 😰 பசி, 😥 தாகத்தினால் தனிமையில் வாடி 😨 வதங்கி 😱 மடிவார்கள்.

👆 இப்படியான சூழ்நிலையில் ஓர் 👮 இளைஞன் ♿ முதுமையடைந்த தன் 🚺 தாயை சுமந்து கொண்டு 🌵 மரங்கள் சூழ்ந்த ❄ காட்டுப்பகுதியில் 🌋  மலை உச்சியை நோக்கி 🚶 நடந்து கொண்டிருந்தான்.

👵 தாய், 👮 மகன் இருவருமே எதுவும் 😷 பேசவில்லை!

ℹ ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ❓ ஏதோ ஒருவித 💭  மணம் கொண்ட 🌳 மரங்களின் சின்னசின்ன 🌾 கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். ❗

👍 உடனே,
💬 ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' 😁 என்று கேட்டான்.

👌 அதற்கு தாயார், 💬 ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு ↪ திரும்பும்போது வழி 🔣 தெரியாமல் 🔂 திண்டாடக் கூடாதல்லவா?

👇 இங்கே போடப்பட்டுள்ள 🌾 கிளைகளை கவனித்து 🚶 நடந்தால் வழி ❌ தவறாமல் நீ பாதுகாப்பாக ⛪ வீடு போய் சேரலாம்.

👆 அதற்காகவே 🌾 கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

♿ ""வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் 👮 மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் 💞  பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள் 💗 மனம் கேட்க, அவன் தன் தாயை ⤵ மீண்டும் தன் ⛪ வீட்டுக்கே கொண்டு வந்து 💞 பாசத்துடன் பராமரிக்கலானான் .

👍 அதன்பின்பு அந்தக் 👎 கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. ❌

👆 இந்த கதை சொல்ல வரும் 📝 கருத்து நம் வாழ்வுக்கு மிக ✅ முக்கியம்..

👉 நீ
👷 நல்லவனா
👺 கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் 👸 தாய் ❗

👎எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த ⛪ வீட்டிற்கு 💰 வாடகை கொடுக்க ❌ முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே ❗

👉 எத்தனையோ
😨 கஷ்டங்கள்
😩 நஷ்டங்கள்
😢 துன்பங்கள்
😭 துயரங்கள்
😰 அசிங்கங்கள்
😱 அவமானங்கள்
⏩ கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொன்டு  👪 குடும்பத்தின் மத்தியில் 😊 சிரித்துக் கொண்டிருக்கும் 👨 தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் 📚 புத்தகம் இந்த உலகில் வேறேதுமில்லை ❗

💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன்  நினைப்பவர்கள். ✅

💞 அவர்களை
👀  கண் போன்று பாதுகாப்போம் 👍👍👍
அடுத்தவருக்கு உதவுங்கள்

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 😄😄😃😃😃😃
மனைவி-ஜோக்

மனைவியின் நச்சரிப்பு தாங்காமல்
கணவன் அவளை ஜெருசலேமிற்கு
சுற்றுலா அழைத்து செல்கிறான்.
அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக
அவன் மனைவி மாரடைப்பில்
இறந்துவிடுகிறாள். அங்கே சொந்த
ஊருக்கு மனைவியின் உடலை
கொண்டு செல்வதற்கு தூதரகத்தின்
உதவியை நாடுகிறான்.
தூதரக அதிகாரி: "சார், உங்க
மனைவியின் உடலை சொந்த
ஊருக்கு கொண்டு போறதுக்கு
50,000 ரூபாய் செலவு ஆகும். இங்க
ஜெருசலேம்ல பொதைச்சிட்ட
வெறும் 500 ரூபாய் மட்டுமே."
கணவன் (அவசரமாக இடைமறித்து):
"அதெல்லாம் ஒரு மண்ணும்
வேணாம். ஜெருசலேம்ல ஏற்கனவே
ஒருத்தர (இயேசு கிறிஸ்து)
பொதைச்சி, அவரு மூணு
நாளைக்கு அப்பறம்
உயிர்த்தெழுந்து வந்துட்டார். இந்த
விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க
விரும்பல. அஞ்சி லட்சம் ஆனாலும்
பரவால என் பொண்டாட்டிய ஊருக்கு
கொண்டு போய்கிறேன்.".😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஈமயில் ID இருக்கா

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய  வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
‬பிறர் துன்பத்தில் பங்கு கொள்ளுங்கள்

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது . அவர்கள் வெளியே எடுத்தது ............
ஒரு...........
எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
[29/11 16:01] ‪+91 98948 28451‬: அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
“ஆ " எனக்கத்தினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்.
வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.
தன்மானம்


ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற போது
இங்கிலாந்து தெருவில் சாதாரணமாக  நடந்து
போய் கொண்டு இருந்தார். அப்போது வழியில்
அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்
ஷோ ரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்து நுழையும் போது ஷோ ரூம் ஊழியர்கள்
இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகனை
அடித்து விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார். பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ்
ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு
அரச உபசாரம் செய்தனர். சிவப்ப கம்பள வரவேற்ப்பு
அளித்தனர். ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்  உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்குவரத்திற்காக
பயன்படுத்தப்படும் செய்தி விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது யாரவது ஐரோப்பா அல்லது
அமெரிக்காவில் நான்   ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்தி கொண்டால் இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம்
செய்யும் நிலைமைக்கு ஆளானது இதன் காரணமாக நிறுவனத்தின்
மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அல்ல பயன்படுத்துவதை
நிறுத்தவேண்டும். அதற்க்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக
தருகிறோம் என்று குறிப்பிடப்பட்ட இருந்தது.
அதற்க்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார் மீது வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை அடித்து குப்பை போல் வெளிய வீசினர் அதற்கு பதில்தான் நான்
உங்கள் கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன். முதலில் ஏழை மக்களை மதியுங்கள் என்று பதில்
அனுப்பினார். வெள்ளை காரனை செவிட்டில்
அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம் அறியட்டும்.
உச்சியை தொட செவிடாய் இரு | அறிவு கதைகள்

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.




போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்


கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன

“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
                          
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது




அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்

அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.

சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”




உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே  

தந்திரம்


நரித் தந்திரம்! - சிறுகதை
ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டுது. எல்லா மிருகமும் வந்தாச்சு.
முதல்லே ஒரு குரங்கைக் கூப்பிட்டுது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’ன்னு கேட்டுது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’ன்னுது.

சிங்கத்துக்கு கோபம் வந்துட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு சுருட்டிக்கிட்டு விழுந்துட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ ன்னது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ ன்னு பொய்யா சொல்றே?ன்னு ஓங்கி ஒரு அறை. அதுவும் சுருட்டிக்கிட்டு விழுந்தது.

அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்துது. சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து. அப்புறம் சொல்லிச்சு; ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’



இதுதான் நரித் தந்திரம்ங்கிறது.
இன்றைய மனிதர்களுக்கு இந்த தந்திரம் அதிகமாத் தேவைப்படுது.
…..அடிக்கடி தேவைப்படுது…

        நட்பு

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
"யாருக்கும் பயனில்லாத , நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....
....
நீங்கள் யாரையும் விட்டு விடாதீர்கள்...
பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"
தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"
தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ
எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்...
சொல்லுப்பா ."
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா
சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய்
சம்பாரிப்பேன் சராசரியா ..."
மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா
அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய்
பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க
உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."
அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு
சென்று படுத்துக்கொண்டான் ..
அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த
கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம்
அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி
கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை
இருந்தால் என்ன செய்வதென்று
முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..
தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா
நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல
இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50
ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து
எழுந்தான்.
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும்
கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன்
தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி
இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட
இல்ல ... இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு
.... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான்
உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ?
நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு
வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட
விரும்புறேன் ... "
அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின்
தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து
மன்னிப்புகேட்டார்
வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும்.
உழைப்பதற்காக வாழாதீர்கள்.
வாழ்வதற்காக உழையுங்கள்.
அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை
எனின் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள்
மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

மனைவி அமைவதெல்லாம்!!

எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இதோ இங்கதான் இருக்கார்........ என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

(சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)


😄😄😄😄😄😄😄😄😂

 

ஒரு எளிமையான கதை; அதே சமயத்தில் ஆழமான சிந்தனை:
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த
உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன.பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள்.மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.""உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.""இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள்.இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.""பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.""ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்

 

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும்
இல்லாமல் வாழ்ந்த
ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக்
கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி
விருந்து வைத்து
தங்களது திருமண நாளைக்
கொண்டாடிய தம்பதியினரைப்
பற்றி அறிந்த அந்த
ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு
பத்திரிக்கையில்
போட விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம்
சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது
என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின்
வெற்றி ரகசியம்
என்ன என்று
கேட்டார்.
இந்த கேள்வியை
கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள்
நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக
சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக
அமைந்தது.
அப்பகுதியை
சுற்றிப் பார்க்க
நாங்கள் குதிரை
ஏற்றம் செல்வது
என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத்
தேர்ந்தெடுத்து,
இருவரும்
ஒவ்வொரு
குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை
மிகவும் அமைதியாக சென்று
கொண்டிருந்தது.
ஆனால் என் மனைவி சென்ற குதிரை
மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது.
திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது
கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக்
கொண்டு அந்த
குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு,
"இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த
குதிரை அவ்வாறே
செய்தது. அப்போதும்
என் மனைவி மிக
அமைதியாக எழுந்து குதிரையின் மீது
அமர்ந்து கொண்டு
"இது தான் உனக்கு இரண்டாம் முறை"
என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை
எடுத்து அந்த
குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு
அதிர்ச்சி அடைந்த
எனக்கு மிகவும்
கோபம் வந்துவிட்டது.
நான் அவளை
திட்டினேன்.
"ஏன் இப்படி
செய்தாய்? நீ என்ன
முட்டாளா? ஒரு
விலங்கைக்
கொன்று விட்டாயே? அறிவில்லையா?"
என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக
என்னைப் பார்த்து,
"இதுதான் உங்களுக்கு முதல் முறை"
என்றாள்.
அவ்வளவு தான்.
அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக
சென்று
கொண்டிருக்கிறது
என்றார் கணவர்....
நட்பு

ஒரு பெரிய மருத்துவமனை...
அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை.

இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர்.

ஒருவரின் படுக்கை சன்னல் அருகில்.

இன்னொருவருக்கு சன்னல் கிடையாது.

எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர

தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய்.

இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி.

நாளடைவில் இருவரும் நட்பாகிவிட்டனர்.

ஒருமுறை,
எலும்பு முறிவு நோயாளி சன்னல் ஓர நோயாளியிடம் சொன்னார்..
உனக்காவது பொழுது போக்காக, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன்.
இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

நண்பா..

சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி..
நடுவில் சிறு தீவு..
ஏரியில் படகுகள் மிதக்கின்றன..
ஏரிக்கரையில் அழகான பூங்கா..!
காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”


எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை..
அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது..
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன.
மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்..
மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை, தனிமை...

ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க...

அங்கே பெரிய சுவர்..!
வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி,
எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார் என்று....


அன்பு நண்பர்களே ..

தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமாக
வைத்திருப்பவனே நல்ல நண்பன்....

நட்புடன் உங்கள் நண்பன்...