படித்ததில் பிடித்த
பூமி சுற்றுகிறது; காற்று வீசுகிறது: பூமி ஈர்க்கிறது. இது எந்த சக்தியால் என்று நீங்கள் கேட்கும்போது, "இயற்கை சக்தியால்" என்று நாத்திகர்கள் பதில் சொல்கிறோம். "அந்த இயற்கை சக்தியை கடவுள் என்று ஏன் கருதக்கூடாது" என்று நீங்கள் திருப்பிக் கேட்கிறீர்கள். அச்சக்தி இறை சக்தியாக கடவுள் சக்தியாக இருந்தால், அதற்குச் சிந்திக்கும் திறனும், உலகை நடத்துகின்ற வல்லமையும். நீதியை நிலைநாட்டும் ஆற்றலும் இருக்க வேண்டும். அனைத்து செயல்களுக்கும் அதுவே பொறுப்பேற்க வேண்டும். அச்சக்தி இயற்கை சக்தியாக இருந்தால் அதற்கும் மேற்கண்ட இயல்புகள் இருக்காது. உலகிலுள்ள சக்திக்கு சிந்திக்கும் திறன் உண்டா என்றால் இல்லை. தீ (நெருப்பு) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அது வெப்ப சக்தி, அதை நல்லவன் தொட்டாலும் சுடும். கெட்டவன் தொட்டாலும் சுடும். இவன் நல்லவன் இவனைச் சுடக் கூடாது; அவன் கெட்டவன் அவனைச் சுட வேண்டும்; இது குழந்தை ஏதும் அறியாமல் தொடுகிறது. எனவே சுடக்கூடாது என்று சிந்திக்கும் திறன் வெப்ப சக்திக்கு இல்லை. காற்றும் அவ்வாறே நல்லவர் கெட்டவர். என்று பார்க்காமல் (சிந்திக்காமல்) அகப்பட்டவர்களை யெல்லாம் அழிக்கிறது. எனவே, உலகில் உள்ள சக்தி சிந்திக்கும் திறன் அற்றதாக இருப்பதால் அது கடவுள் சக்தியல்ல.அடுத்து, உலகிலுள்ள சக்தி இவ்வுலகை வழி நடத்துகிறதா என்றால் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் நாம்தான் முயன்று செய்து முடிக்கிறோம். உலகிலுள்ள அனைவரும் ஒரு வருடத்திற்கு எந்த வேலையும் அற்றதாக செய்வதில்லையென்று இருந்துவிட்டால், இவ்வுலகில் எந்த செயல் நடைபெறும், எது உற்பத்தியாகும்? ஒரு கூலிக்காரன் ஒரு வாரத்திற்கு எந்த வேலையும் செய்வதில்லையென்று இருந்துவிட்டால், அவனுக்கு தானே உணவு கிடைக்குமா? மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று பெற்றக் குழந்தையை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால் உலகிலுள்ள சக்தி அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குமா? பட்டினி கிடந்து ஓரிரு நாட்களில் அக்குழந்தை இறந்தல்லவா போகும். எனவே, இவ்வுலகை-இவ்வுலக வாழ்வை- நாம்தான் நடத்திச் செல்கிறோமே அல்லாமல் இவ்வுலகிலுள்ள சக்தியல்ல. ஆகவே, உலகை நடத்தும் வல்லமையற்ற அச்சக்தி கடவுள் சக்தியல்ல. மூன்றாவதாக. உலகிலுள்ள சக்தி நீதி நேர்மையை நிலை நாட்டுகிறதா என்றால் இல்லை. உலகில், செய்கிறவனுக்குத் தண்டனை தவறுகளைச் கிடைப்பதில்லை: சுகமாக வாழ்கிறான்-கள்ளக் கடத்தல்காரனும், கள்ளநோட்டு அடிப்பவனும், வரி ஏய்ப்பவனும், கொலைகாரனும், கொள்ளையடிப்பவனும் சுகமாக வாழ்கிறான். நேர்மைவாதியும், உயர்ந்தவனும், குடிக்கக் கூழும், குந்தக் குடிசையுங்கூட இன்றி தவிக்கிறான்; கொடிய நோய்களால் தாக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுகிறான். உலகில் உள்ள சக்தி கடவுள் சக்தியாக இருந்தால் இப்படி நீதியற்ற போக்கு இருக்குமா? எனவே உலகிலுள்ள சக்திக்கு சிந்திக்கும் திறனும், உலகை நடத்தும் வல்லமையும், நீதியை நிலைநாட்டும் ஆற்றலும் இல்லாததால், இயல்பாய் இயங்கிக் கொண்டிருப்பதால் அது இயற்கை சக்திதானே?சிந்தனைத் திறனற்ற சக்தியை வேண்டுவதால் பிரார்த்திப்பதால் எள்ள பயன்? நாம் சொல்வது அதற்குப் புரியப் போகிறதா?. அதற்குத்தான் சிந்தனைத் திறனே இல்லையே? எனவே, இயற்கைச் சக்தியை அறியாமையால் வழிபடுவதை விடுத்து, அதை நம் நலத்திற்குச் சாதகமாய் விஞ் பயன்படுத்துவதைப்போல பயன்படுத்திக் கொள்வதுதானே உகந்தது?