வியாழன், 4 நவம்பர், 2021

பகுத்தறிவு கதை கலைஞர் நல்ல நேரம்

 #கேள்வி: நல்லகாரியங்கள் நடத்துவதற்கு நாள் நட்சத்திரம் பார்ப்பது எப்படி மூடநம்பிக்கையாக இருக்க முடியும்


கலைஞர்:-  

வசிஷ்டர் வாயால் பிர்ம்மரிஷி பட்டம் பெறுவது பெரும் பாக்கியம் என்கிறது புராணம். அத்தகைய மகரிஷி வசிஷ்டர் பார்த்துக் கொடுத்த நாளிலேதான் இராமனுக்குப் பட்டாபிஷேகத்துக்கு நேரம் குறிக்கப்பட்டது. ஆனால் அந்த வசிஷ்டர் குறித்த நாளும் நட்சத்திரமும் இராமனை நாடாளச் செய்யாமல் காட்டுக்கல்லவா அனுப்பி வைத்தன.!  அதுவும் ஒருநாளா? இருநாளா? பதினான்கு ஆண்டுகள்! காட்டில்தான்

 என்ன; சாதாரண கஷ்டங்களா? அந்த இராமன் தனது ஆருயிர் மனைவி சீதையையே  அக்னிப்பிரவேசம் செய்து  கற்புக்கரசியா இல்லையா என்று சோதிக்க வேண்டிய சூழ்நிலையெல்லாம் ஏற்பட்டுவிட்டதே! எனவே வசிஷ்டர் பார்த்த நாளே வம்பிலே கொண்டுபோய் விட்டு விட்டபோது; பிழைப்புக்காக சோதிடம் பார்ப்பவர்கள் குறிக்கும் நாள் நட்சத்திரங்களால் என்ன பயன் ஏற்படும்? இப்படி கேள்வி கேட்பதுதான் பகுத்தறிவு!

புதன், 23 ஜூன், 2021

ஜாக்கி ஜான்

 நான் அடுத்த ப்ரூஸ்லீ-யாக எப்போதுமே விரும்பியதில்லை. ஆனால், நான்தான் முதல் ஜாக்கிசான்-ஆக இருக்க வேண்டும் என விரும்பினேன்.!


-ஜாக்கிசான் https://t.co/LHr0jmhV7c

பெரியார்

 ஒருமுறை ஈரோட்டில், 'விஜயராகவாச்சாரியார்' என்ற வழக்கறிஞரைச் சந்திக்க பெரியாரின் தந்தை செல்கிறார். அப்போது 8 வயது சிறுவனாக இருந்த பெரியாரும் உடன் செல்கிறார்.

அங்கே "வழக்கு ஜெயிச்சிடலாங்களா?" என்று பெரியாரின் தந்தை மீண்டும் மீண்டும் மிகவும் பணிந்து கேட்கிறார்.

மிகப்பெரிய செல்வந்தரும் பல திருக்கோயில்களின் தர்மகர்த்தாவுமான தன் தந்தையார், ஒரு வழக்கறிஞரிடம் இவ்வளவு கூனிக்குறுகுவதை, சிறுவனான பெரியார் வியந்து பார்க்கிறார்.

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்த பெரியாரின் தந்தையாரிடம், "என்னை என்ன கவுண்டன்னு நெனச்சியா?"

என்கிறார் அந்த வழக்கறிஞர். அதாவது அப்போது கவுண்டன் என்றால் படிப்பறிவில்லாதவன், முட்டாள் என்ற அர்த்தத்தில் கூறுகிறார்.

1960களில், அந்த கொங்கு சமூகத்தைச் சேர்ந்த

Justice KS Palanichamy என்பவர் சமூகநீதியால் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கிறார்.

அதற்கான பாராட்டுவிழாவில் பெரியார் அந்தச் சம்பவத்தைக் கூறி, "இப்போ சொல்லுவானா கவுண்டன்னு... My Lord My Lordனு கூப்பிடுவான் ல.." என்கிறார்.


திங்கள், 21 ஜூன், 2021

My lord-வழக்கறிஞர் அருள்மொழி

 சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள் படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.


அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே நிறுத்த வேண்டாம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீதிபதிகளை மை லார்டு என்றே அழைக்கலாம்” என்று சொல்ல, அதைக் கேட்ட மற்றவர்கள் ஆச்சரியத்துடன், *"சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீங்கள் எப்படி அந்த அடிமை முறை தொடரவேண்டும் என்று சொல்கிறீர்கள்?”* என்று கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் சொன்ன விடை பார்ப்பனீய சூழ்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக்காட்டியது.


“வேறொன்றுமில்லை, விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்தார்கள். அப்போது அவர்களை ‘மை லார்டு’ என்று வழக்கறிஞர்கள் அழைத்தனர். அதற்குப்பிறகு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே நீதிபதிகளாக இருந்துவந்தனர். அவர்களையும் ‘மை லார்டு’ என்று அழைத்தோம். அப்போதெல்லாம் உறுத்தாத அடிமைத்தனம், பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் நீதிபதிகள் ஆகியுள்ள இக்காலத்தில் மட்டும் ஏன் உறுத்துகிறது?


இந்த நீதிபதிகளையும், சிலகாலம் ‘மை லார்டு’ என்று அழைக்கலாம். தங்களை மேல்சாதியினர் என்று கருதிக் கொண்டிருக்கும் வழக்குரைஞர்கள், வெள்ளைக்காரர்களை மை லார்டு என்று அழைத்த நாவால், மற்றவர்களையும் சில காலம் அழைக்கட்டுமே!” என்று விளக்கமாக விடைசொன்னபோது, மெல்ல மெல்லக் கரவொலி, கூட்ட அரங்கை நிறைத்தது !


Via:Kavitha Gurunathan 


#ராட்சசி Annamalai Arulmozhi

வெள்ளி, 18 ஜூன், 2021

மம்முட்டி -- இரண்டு ரூபாய் நோட்டு

 #ரெண்டு_ரூபாய்_நோட்டு. 


அகில இந்திய ஸ்டார் நடிகராக இருந்தாலும் துளிக்கூட பந்தா இல்லாத, மைக்கில் அட்வைஸ் பண்ணாத, நடிகர் மம்மூட்டி அவர்களின் மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் என்ற நூலிலிருந்து...

   

ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி புறப்பட்டேன். புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லை தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி. 


அது பனி படர்ந்த இரவின் தொடக்கமாய் இருக்கும் நேரம். அமைதியாய் என் காரில் ஒலிநாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன். 

அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம்.. பார்க்க ஒடிசலான வயசான கிழவன்.. கையில் கைவிளக்குடன் தலையில் முக்காடுடன்..

கைநீட்டி வழிமறித்தான். இந்த ராத்திரி வேளையில் யாரென்னவென தெரியாமல் வண்டியை நிறுத்தி மாட்டிக் கொள்வானேன் என வண்டியை நிறுத்தாமல் போனேன். 


ஒரு அரை கிலோமீட்டர் போயிருப்பேன். ஆனால் அந்த கிழவனின் கண்ணில் தெரிந்த தவிப்பும் கவலையும் ஒரு கணம் என்னை யோசிக்க வைக்க, வண்டியை திருப்பி மீண்டும் அந்தப் பகுதியை அடைந்தேன். 


அந்தக் கிழவன் அங்கேயே நின்றிருந்தார். எங்கய்யா போகணும்..? என்றேன். 


'இல்லைய்யா.. என் பேத்திக்கு வவுத்து வலி நெறமாச கர்ப்பிணி.. ரொம்ப நேரமா நிக்கிறேன்.. வண்டியே வரலைய்யா...' என்கிறார். 


'சரி.. ஏறுங்க..' என சொல்லி இருவரையும் ஏத்திக்கொண்டு ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு விரைகிறேன்.


இன்னுமா நாம யாருனு இவருக்கு தெரியல என்ற யோசனை எனக்குள். ஒரு வேளை பேத்தி பற்றிய கவலையிலும் இந்த இருளிலும் நம்மை அவருக்கு அடையாளம் தெரியாது போயிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். அந்தப் பெண் கிட்டத்தட்ட மயக்கமுற்ற நிலையிலிருந்தாள். 


மருத்துவமனை அடைந்ததும் செவிலியர்கள் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குள்ளே விரைந்தனர். அப்போது நான் காரை விட்டு இறங்காததால் செவிலியர்களும் என்னை கவனிக்கவில்லை. 


பிறகு அந்தக்கிழவன் 'ரொம்ப நன்றிய்யா.. அவசரத்துக்கு உதவின.. இந்தா, இத டீ செலவுக்கு வச்சிக்க...' என என் கையிலொரு நோட்டை திணித்தார். அந்த ஓட்டை ஒடிசலான எந்த கடையிலும் சிங்கள் டீ கூட குடிக்க முடியாத செல்லாத ரெண்டு ரூபாய் நோட்டை பார்த்து விட்டு அவரை ஒரு முறை மீண்டும் பார்க்க.. அவரோ 'சும்மா வச்சுக்கய்யா..' என்றபடி மருத்துவமனைக்குள் போய் சட்டென மறைந்து விட்டார். 


ஆம்..நானும் எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது. 


நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை பாதுகாத்து வருகிறேன்.


படித்ததில் பிடித்தது.

செவ்வாய், 8 ஜூன், 2021

பெரியார் நிகழ்வுகள்

 *பொதுக்கூட்டம் ஒன்றில் பெரியாரிடம் ஒரு ஐயர் கேட்கிறார்!!!*


*எண்ணிக்கையில் இரண்டு சதவீதம் உள்ள பார்ப்பனரை* *எதிர்க்கிறீர்களே!!!*

*ஞயாமா???*


பெரியார்: உங்களுக்கு 

சந்தைக்கு போகும் பழக்கம் உண்டா?


ஐயர்: போவேன்


பெரியார்:சந்தைல ஆடு கோழினு வாங்குவிங்களா? 

ஐயர்: இல்லைங்க நாங்க சைவம் காய் கறி மட்டும் தான் வாங்குவேன்


பெரியார்: பூண்டு வெங்காயம்

வாங்குவிங்களா?


ஐயர்: இல்லைங்க அது எங்களுக்கு

ஆகாது!


பெரியார்: அப்படினா குறைந்த 

காசுதான் எடுத்துட்டு போவிங்க!

அந்த பணத்தை சுருக்கு பையில போட்டு 

வெளிய தொங்கவிட்டு போவிங்களா?

ஐயர்:அது எப்படிங்க 

சந்தைல திருடனுங்க அடிச்சிட்டா?


பெரியார்: அதெப்படிங்க சந்தைக்கு வர்ற எல்லாம் திருடனா?


ஐயர்: இல்லை ஒன்றிரண்டு பேர் தான்!


பெரியார்: ஆயிரம் பேர் கூடுற எடத்துல எப்படி அந்த ஒருத்தன் ரெண்டு பேருக்கு பயந்து பணத்தை பாதுகாக்க நீங்க நினைக்கிறிங்களோ அப்படி தான்

இந்த சமுகத்தில் இரண்டு சதவீதம் உள்ள பார்ப்பனரை கண்டு பயப்படுகிறோம்!


எங்க வேலைவாய்ப்பு முதல் எல்லாவற்றிலும் பொய் புரட்டு கதைகள் மூலம் சுரண்டல்கள் நடப்பதை தடுக்கவே 98 சதவீதம் பேரும் விழித்திருங்கள் என்கிறோம்!


ஐயர் நடையை கட்டுகிறார்!


நீ படிச்ச ஸ்கூல்ல

எங்க கிழவன் எட்மாஸ்டர்டா!

ஞாயிறு, 23 மே, 2021

மீடியா

 ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்..


அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை கண்டார்கள்


ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது..என்றார்.


2வது மருத்துவர் இல்லை..அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது . என்றார் 

3வது மருத்துவர் அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .. என்றார்


4வது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது ..என்றார்.


5வது மருத்துவர்: "அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது என்றார் 


6வது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு..


அந்த மனிதர் அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.


தற்போது எல்லா டிவி, சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என, கொரானா வைரஸ் பற்றியும், மற்ற நாட்டு நடப்புகளை பற்றியும் வந்து பேசுபவர்கள், இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள்.

90 சதவீத செய்திகளையும்.. தொலைக்காட்சி விவாதங்களையும்.. பார்க்காமல் தவிர்ப்பது.. நமக்கு, குடும்பத்திற்கு, சமூகத்திற்கு மற்றும் நாட்டுக்கு நல்லது

புதன், 21 ஏப்ரல், 2021

கல்வி வரலாறு

 Thread கொஞ்சம் நீளம்தான்🤨(1/23). 

என்ன செய்ய? 

வரலாறு முக்கியமல்லவா!🤩


கல்வி வரலாறு இதோ🤗


ஏன் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது...?

கல்வி மறுக்கப்பட்ட நமக்கு அந்த கல்வி கிடைத்தது எப்படி ? 


1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவின் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக,


2/23-வருடம் தோறும் வழங்கிய 20 லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்! அவ்வளவு பணத்தில் ஒரு ரூபாகூட இந்திய பொதுமக்களுக்கு போய்


3/23-சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, அறிவியலோ வளரவே இல்லை. 

அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலைகள் நடத்தி சமஸ்கிருதம் வளர்க்க தான் செலவாயிற்று என்ற தெரியவந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியை தந்தது.

காரணம் பிரிட்டனில் கல்வி என்பது மதச்சார்பற்று எல்லா மனிதருக்கும் பொதுவானது.


4/23-பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பிராமணரைத் தவிர வேறு எந்த சாதியினரும் கல்வி



கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது. இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்காலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.


5/23-தாமஸ் மெக்காலே ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தாளர், பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி. இந்த லார்ட் மெக்காலே இந்தியாவிற்கு வந்தார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.


6/23-அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் தெரியும் என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.


ஆழமான ஆய்விற்கு பிறகு, “இந்தியாவில் கல்வி” என்ற அறிக்கையை 1835-ல் வெளியிட்டார். இந்த அறிக்கை Minute on Indian Education என்றும் பிறகு


7/23-Macauley’s Minutes என்று புகழ் பெற்றது.

அந்த அறிக்கையில் மெக்காலே சொன்னது என்ன ?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்த்தாலும், அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி புத்தகங்களின் உள்ளடக்கத்தைவிட குறைவான தகவல்களாகவே உள்ளன.

2. இந்தியாவில் இது வரை


8/23-சமஸ்கிருதத்திலும் அரபியிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்தவை இல்லை


3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டு மிராண்டித் தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்


4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு. அது அனைவருக்கும் போய் சேரவில்லை.


9/23-மெக்காலே, எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அந்த கல்விக்கான செலவை பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

வேறு சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு


10/23- என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் தாம்ஸ் மெக்காலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர். மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்க முடியவில்லை.


1833-ஆம்


11/23-ஆண்டு இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. 


அது வரை கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் இருந்த இந்தியா, 1833 முதல் நேரடி பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்கப்பட்டது. 


லார்ட் பில்லியன் பெண்டிங் பிரபு என்பவர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார்.


12/23-அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்: "பெங்கால் சதி தடைச் சட்டம்"


இந்தியாவில் ஆங்கிலேயருக்கு பிடிக்காத வழக்கம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் கொடூரமேயாகும்.


இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால், மனைவி மறுமணம். செய்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவிலோ கணவன்


13/23-இறந்தால், கணவனின் சிதையில் அவளும் குதித்து சாகவேண்டும் என்பதே சதி அல்லது உடன் கட்டை ஏறுதல் என்னும் சடங்கு.


பிள்ளைகளைப் பெற்றிருக்கும் ஒரு பெண், தன் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதித்து சாவது ஒரு கொடுமை…


ஆரோக்கியமான ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்வது பெரும்


14/23-குற்றம் என்பதை இந்துக்கள் எவரும் ஏற்கவில்லை 

மனைவி உடங்கட்டை ஏறி மாண்டால், கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவங்களும் தொலைந்துபோய், அடுத்த பிறவியில் காசியில், புனித நதியாக கங்கைக் கரையில் ஒரு பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான். அதனால் தன் கணவனுக்கு இந்த


15/23-பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம் என்று நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் அந்தநாள் இந்துக்கள். ஆனால் அந்த பெண் தீயில் குதித்தால் அவள் தீயில் கருகி வலியில் துடிப்பாளே?

இல்லை! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த


16/23-பாக்கியம்..??!! அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!!!... என்று சொல்லி, கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.


இந்த கதைகளை நம்பி, சத்திரிய பெண்களையும், வைசிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுகொண்டிருந்தார்கள்!


ஆனால் சூத்திர பெண்கள் உடன்கட்டை


17/23-ஏறுவதில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள். உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்றத் தயாராக இல்லை.


18/23-பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கெடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிர வேறு யாருக்கும் எந்த இழப்பும் இல்லை…


இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை


19/23-நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு கோபம் எழுந்தது. 


பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலவற்றை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. இந்த சமஸ்கிருதத்தினை வளர்க்க நாம் இருபது


20/23-ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற கோபமும் இருந்தது !!


சதியை தடை சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்காலேவின் அறிவுரையின் படி, அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்: 


இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க, ஆங்கிலமே கல்விக்கான மொழி!


21/23-ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும் மத கல்விக்கு பண உதவிகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தார்கள்.


ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம்


22/23-வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது.


1835ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி, அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்


1847ல் ருர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.


1848ல் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேகப்பள்ளி


1858ல் கல்கத்தா, சென்னை, மும்பாய்


23/23- ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவங்கப் பட்டன.....


இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது.


தாம்ஸ் பாபிங்டன் மெக்காலேதான் நமக்கு கல்வி அளித்த வள்ளல் ..!!


கல்வி - அது வெரும் சொல் அல்ல! 

2000வருட இடைவெளியை மீட்டெடுத்த வரலாறு!

பெரியார்

1/25-என் பள்ளி பருவத்து தோழன் பகிர்ந்த குறிப்புகள்👇🏽


சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி. "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்

'ஆமாம் #பெரியார் தான்


2/25 எல்லாம் செய்தார்!'

வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன


3/25-சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்


நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.


- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.


4/25-2000 வருஷமா கண்ணை மூடிட்டு பின்பற்றி வந்த சாஸ்திரத்தை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை இவ்வளவு வலிமையா பெரியாரை விட வேற யார் எதிர்த்தது இருக்காங்க? ஒரு பேரை சொல்லுங்களேன் பார்ப்போம்..


- இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குறதுக்கு 30 வருஷம் முன்னாடி இருந்தே, வகுப்புவாரி

இடஒதுக்கீடு


5/25-வேணும்ன்னு குரல் கொடுத்தவர் பெரியார். காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 6 வருஷமா கேட்டும் இடஒதுக்கீட்டு தீர்மானத்தை கொண்டுவராததால, "சமூகத்தை பத்தி கவலைப்படாம, சுதந்திரம் கிடைச்சு என்ன பிரயோஜனம்? இடஒதுக்கீடு தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி நிறைவேத்தாதுன்னா, எனக்கு காங்கிரஸே வேணாம்"னு


6/25-சொல்லி கட்சியை விட்டு விலகுனவர் பெரியார்.


- காங்கிரஸை விட்டு வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் பெரியார். "காங்கிரஸ் கட்சி என் எதிரி இல்ல, ஜாதி தான் எதிரி... ஜாதியை தூக்கி பிடிக்குற வைதீக மதத்தையும், கடவுளை போதிக்குற சாஸ்திரத்தையும்,

மூடநம்பிக்கைகளையும் வாழ்க்கை


7/25-முழுக்க தீவிரமா எதிர்க்க போறேன்"னு சொன்னார்.


- 1937ல மெட்ராஸ் பிரசிடென்சியோட முதல்வரா ராஜாஜி இருந்தப்போ, பள்ளிக்கூடங்கள்ல ஹிந்தியை கட்டாய மொழி ஆக்குனப்போ இந்த மாகாணம் முழுக்க ஹிந்திக்கு எதிரா புரட்சி வெடிக்க காரணமா இருந்தார்.

1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துல உயிரை விட்ட


8/25-தாளமுத்து நடராசனுக்கு 1940ல வடசென்னையில நினைவு மண்டபம் எழுப்பினார் பெரியார்.


- இந்தியாவிலேயே பேருக்கு பின்னால ஜாதியை போட்டுக்காத ஒரே மாநிலமா தமிழ்நாடு இருக்குறதுக்கு ஒரே காரணம், சுதந்திரம் அடையுறதுக்கு முன்னாலேயே

'சுயமரியாதை இயக்கம்' மூலமா பெரியார் எடுத்த முன்னெடுப்பு!


9/25-இன்னைக்கு வரை, ஒருத்தனோட ஜாதியை நேரடியா கேட்குறதுக்கு கூச்சப்படுறானுங்கல்ல? அதுக்கு காரணம், பெரியார் இல்லாம வேற யாரு?


- தமிழ் மொழியை எளிமையா எழுதுறதுக்காகவும், அச்சடிக்குறதுல இருக்குற சிரமங்களை குறைக்குறதுக்காகவும்...


15 தமிழ் எழுத்துக்கள்ல சீர்திருத்த மாற்றங்களை


10/25-முன்மொழிந்தார் பெரியார். அவரோட இந்த மொழி சீர்திருத்தத்தை அக்டோபர் 1978ல அரசாணையில கொண்டுவந்த பெருமை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சேரும்.


கடந்த 100 வருஷத்துல பெரியார் அளவுக்கு பெண்களுக்காக பேசுன ஒரு தலைவர், இந்தியா முழுமையிலும் கிடையாதுன்னே சொல்லலாம். உடன்கட்டை ஏறுதலுக்கு


11/25-எதிராவும், குழந்தை திருமணத்துக்கு எதிராவும், தேவதாசி முறைக்கு எதிராவும் பேசியவர், போராடியவர் பெரியார். விதவை மறுமணத்தோட அவசியம் பத்தியும், குடும்பக்கட்டுப்பாடோட அவசியம் பத்தியும்,

பெண்களுக்கு சொத்துல உரிமை வேணும்ன்னும் பல மேடைகள்ல பேசுனவர்.


இன்னைக்கு நாம பேசுறோமே..


12/25-பொண்ணுங்களோட financial independence, பொண்ணுங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணனும்ன்னு அதையெல்லாம் அந்த மனுஷன் 100 வருஷமா முன்னாலேயே பேசிட்டு போயிருக்கார்.

- பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிச கொள்கை தடை செய்யப்பட்டிருந்தப்போ, கம்யூனிச கொள்கைகளை மொழிபெயர்த்து எழுதி


13/25-மக்கள்கிட்ட பரப்புனவர் பெரியார்.


- ஒரு முறை காந்திஜி அவர்கள் "தீண்டாமை தப்பு, ஆனா வர்ணாசிரமம் தப்பு இல்ல"ன்னு சொன்னப்போ உடனே அவரை போய் பெங்களூர்ல சந்திச்சு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சுட்டு வந்தார் பெரியார்.. "நம்ம சட்டம் தீண்டாமைக்கு எதிராதான் இருக்கு, ஜாதிக்கு எதிரா இல்ல.


14/25-அதையேதான் நீங்களும் சொல்றீங்க, மகாத்மா... மதத்தை வெச்சுக்கிட்டு, சமுதாயத்துல உங்களால எந்த சீர்திருத்தத்தையும் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டு வந்தார்.

- 1939ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்துல இருந்தப்போவும், 1942 காலக்கட்டத்துலயும், இரண்டு முறை முதல்வர் பதவி பெரியாரை


15/25-தேடி வந்தது... அவர் தலைமையில மந்திரி சபை அமைக்க சொல்லி ஆளுநர் சொன்னப்போ, 'வேணாம், எனக்கு பதவியில ஆசை இல்ல'ன்னு பெரியார் சொல்லிட்டார்...

ராஜாஜி அவர்கள் கூட 'உங்க தலைமையில ஆட்சி அமைச்சா, நான் காங்கிரஸ் ஆதரவு வாங்கி தர்றேன்"னு சொன்னார். ஆனா, "பதவின்னு வந்துட்டா, நாம எவனை


16/25-எதிர்க்குறோமோ அவன் கூடவே சமாதானமா போகவேண்டியிருக்கும்.. அதனால, சாகுற வரைக்கும் எந்த அரசியல் பதவியும் வேணாம்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்..


அரசியல்வாதிகளுக்கு வேணா அந்த பொழப்பு சரிப்பட்டு வரும், எனக்கு அது வேணாம்"னு சொல்லிட்டார். எந்தவொரு உட்சபட்ச பதவியையும்,


17/25-பணத்தையும் துட்சமா நினைச்ச ஒரு தலைவர் பெரியார்!


1947'ல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ கூட, "அதிகாரம் பிரிட்டிஷ் காரன் கையிலருந்து,

பார்ப்பனர்கள் கைக்கு போயிருக்கு அவ்ளோதான்... அடிமட்ட ஜனங்களுக்கு இது ஒரு துக்க நாள் மட்டுமே"ன்னு சொன்னார் பெரியார்!


- எல்லா தலைவர்களும்


18/25-தன்னை பின்தொடர்ந்து வர்றவங்களை எல்லாம் "நான் சொல்றத செய்ங்க"ன்னு தான் சொல்வாங்க. ஆனா, பெரியார் ஒருத்தர் தான், 'யார் எது சொன்னாலும், அதை நம்பாதீங்க... கேள்வி கேளுங்க... ஏன், நானே சொல்றதையும் கேள்வி கேளுங்க... அப்புறமா, நீங்க முடிவெடுங்க.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை


19/25-பண்ணுங்க"ன்னு சொன்னார்.

ஒரு முறை, மெட்ராஸ் யூனிவர்சிட்டியோட vice chancellor சுந்தரவடிவேலு அவர்கள் “இன்னைக்கு கிராமத்துல கூட படிச்சவங்க எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கு, நிறைய கல்விக்கூடங்கள் இருக்குதுன்னா, அதுக்கு நீங்க கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்"ன்னு காமராஜரை புகழ்ந்தப்போ


20/25-"இதுக்கெல்லாம் பெரியார்தான் காரணம். அவர்தானே அடித்தட்டு மக்கள் எல்லாரும் படிக்கணும்ன்னு ஆசைப்பட்டார்"ன்னு பெரியாரை நினைவுகூர்ந்தார் காமராஜர்.

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியை ஒரு கோட்டையா ஆக்க பாடுபட்டவர் பெரியார். அந்த கோட்டையை கட்டி எழுப்பிட்டு, அதை அனுபவிக்காம வெளியே


21/25-போய்ட்டார். அவர் நினைச்சிருந்தா, எப்பவோ முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனா, மக்கள் தொண்டுதான் முக்கியம்ன்னு நினைச்சார். காங்கிரஸ்ல இருந்துக்கிட்டு பெரியார் சொன்ன சமூகநீதி கொள்கையை நான் செயல்படுத்துறேன்னு சிலர் என் மேல புகார் சொல்றான். அதுக்கு நான் பெருமைப்படுறேன்"னு சொன்னார்


22/25- 'கல்வி கண் திறந்த' காமராஜர்.


- பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் முதல்ல கையெழுத்து போட்ட "சுயமரியாதை திருமண சட்டம்" உருவாக முழுமுதற் காரணமா இருந்தவர் பெரியார்.


இந்தியாவிலேயே OBC ரிசர்வேஷனை முதன்முதல்ல கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதே போல, இந்தியாவிலேயே முதல்முறையா தலித்


23/25- சமூகத்தை சேர்ந்த ஒருத்தர் நீதிபதி ஆன பெருமையும் பெரியார் அவர்களையே சேரும்.


அனைத்து சாதி மக்களும் கோவில் கருவறைக்குள் போக அனுமதி வேண்டும்"ன்னு போராட போறேன்னு

பெரியார் சொன்னார்.... அப்போ, "அதுக்கு அவசியமே இல்ல.. எல்லா சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு சீக்கிரமே ஒரு சட்டம்


24/25-கொண்டுவர்றேன்"னு சொல்லி அந்த போராட்டத்தை நிறுத்தினார் கருணாநிதி.

- பெரியாரை பத்தி பேரறிஞர் அண்ணா "உலக தலைவர்களில், தன்னுடைய காலத்திலேயே தன் கொள்கை வெற்றி பெறுவதைப் பார்த்த ஒரே ஒருவர் நீங்கள்தான்"னு சொன்னார். அதுதான் உண்மையும் கூட. ஹிந்துத்துவா, தமிழ் தேசியம் உட்பட எந்த


25/25-அரசியல் கொள்கையை முதன்முதல்ல பேசுனவங்களும் அந்த கொள்கை அரசியல்ரீதியா வெற்றியடையுறதை பார்க்கல!

காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், வைகோ, ராமதாஸ், உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியோட நிறுவனர் கன்ஷி ராம் உட்பட எத்தனையோ தலைவர்களோட


25/25a-சமூக நீதி கொள்கைகளுக்கு ரோல் மாடல் ஆக இருந்தவர் / இருப்பவர் பெரியார்.

பெரியார் அவர்கள் இறந்து போறதுக்கு சில நாள் முன்னால சொன்ன விஷயம்... "இந்தி திணிப்பை எதிர்த்து ஜெயிச்சாச்சு.. தெருவுக்குள்ள விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து போராடி ஜெயிச்சாச்சு.. கோவிலுக்குள்ள


25/25b-விடமாட்டேன்னு சொன்னவங்களை எதிர்த்து ஜெயிச்சாச்சு..

ஆனா, நான் சாகும்பொழுது இப்போவும் உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறேனே. இந்த ஜாதியை இன்னமும் ஒழிக்க முடியலையே"ன்னு வருத்தப்பட்டார்.

நாடு முழுக்க கால்தடம் பதிச்ச பாஜக, இன்னமும் தமிழ்நாட்டுல மட்டும் நோட்டாவுக்கு கீழே


25/25c-இருக்குன்னா அதுக்கு காரணம் பெரியார் அவர்கள் வளர்த்தெடுத்த சமூகநீதி, சமத்துவ கொள்கைகள்!


வரலாறு தெரிஞ்சவர்கள் வாட்சப் வதந்தியை பார்த்து வாயை பொளக்காதவர் தெரியும்.

ஆமா பெரியார் தான் எல்லாம் பண்ணார்

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பாராட்டு கவிதைகல்ல ஆளுக்கு..(கண்ணதாசன்)

 கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்துமுடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,கண் ­ணதாசன் சொன்னார்,”இன்று நான் வாசித்த கவிதை நான்எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்

நேற்று ஒரு கவிதை எழுதிக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்

.அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.

ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்

பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது.

வியாழன், 15 ஏப்ரல், 2021

தாத்தா பேரன் பாசம்( கலைஞர்)

 கலைஞரின் இறுதிக் கட்டத்தில் பேனா வைத்து வழி அனுப்பிய பேரன்.

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழியின் மகன் ஆதித்யா தனது தாத்தா விட்டுச் சென்ற அவரது பேனாவை இறுதி கட்டத்தில் அவா் சட்டைப் பையில் வைத்து அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

காவேரி மருத்துவமனையில் உயிாிழந்த கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லம், சிஐடி காலணி இல்லம் பின்னா் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு மெரினா கடற்கரைக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பேழையில் கலைஞர் பிரியமுடன்

பயன்படுத்திய கண்ணாடி, அண்ணா அணிவித்த மோதிரம், மூத்த மகன் என்று அழைக்கப்படும் முரசொலி நாளேடு ஆகிய பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

இருப்பினும் ஏதோ ஒன்று குறைவதாக அவரது பேரனுக்கு என்னம் எழுந்துள்ளது. இறுதியில் கலைஞரின் உடல் மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட 

பின்னா் எம்.பி. கனிமொழியின் மகன் ஆதித்யா அருகில் இருந்த அதிகாாி ஒருவரிடம் சாா் உங்க பேனாவ கொஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளாா். அந்த அதிகாரியும் பேனாவை கொடுத்துள்ளாா். பேனாவை பெற்றுக் கொண்டு, இந்த பேனாவை நான் உங்களுக்கு மீண்டும் தரமாட்டேன் என்று தொிவித்துள்ளாா்.

இந்த இடத்தில பேனாவ வச்சி என்ன செய்ய போறேனு அந்த அதிகாாி கேட்டுள்ளாா். அதற்கு பேரன் ஆதித்யா கூறுகையில், கலைஞருக்கு மிகவும் பிடித்தமான பொருள் பேனா. ஆனால் தற்போது அவர் அருகில் பேனா இல்லை. எனவே உங்கள் பேனாவை அவா் அருகில் வைக்கப் போகிறேன் என்று தொிவித்துள்ளாா். இதனை கேட்ட அதிகாாி மிகவும் நெகிழ்ந்து போனாா். பின்னா் அந்த பேனாவை புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆதித்யாவிடம் வழங்கி விட்டாா். இறுதியில் அந்த பேனா கலைஞரின் சட்டை பையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கறுப்பு கண்ணாடி, அண்ணா அணிவித்த மோதிரம், முரசொலி நாளேடு, பேனா என மீண்டும் ஒரு பத்திாிகையாளனாகவே 

கலைஞர் பூமிக்குள் விதைக்கப்பட்டார்.


புத்தர்

 புத்தர் தன் சீடர்களுடன் ஆற்றை கடக்கும் போது ஒரு இளம்பெண்  உதவி கேட்டாள். புத்தர் தன் தோளில் அந்த பெண்ணை சுமந்து ஆற்றின் அக்கரையில் இறக்கிவிட்டார்.


 அவரது சீடர் ரெம்ப நேரம் மனக்குழப்பத்தில் வருவதை கண்ட புத்தர் "என்ன ஆனந்தா என்ன குழப்பம் உனக்கு?" என்று கேட்டார். நாம் பிரம்மச்சாரிய விரதம் கடைபிடிப்பவர்கள். நீங்கள் அந்த பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டுவந்தது எப்படி சரியாகும். தவறில்லையா..?என்று கேட்டார் ஆனந்தர். 


புத்தர் "ஆனந்தா அந்த பெண்ணை கரையிலேயே இறக்கி விட்டுவிட்டேன். நீ இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாயா..?" என்று கேட்டாராம்.ஆனந்தர் தன் தவறை உணர்ந்து திருந்திட்டாராம்....


இந்த GROUP இன்னும் திருந்தல போல😄😄😄

இப்ப ஜெயலலிதாம்மா திரும்பிவருவாங்கனு சொன்ன ஜோசியக்காரனுங்க எல்லாம் ஞாபகத்துக்கு வர்ரானுங்க....

திங்கள், 8 பிப்ரவரி, 2021

கழுகு

 #eagles_lesson


வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்:

 

1) வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.


கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து கொண்டு வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.


உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை இழுத்துச் செல்லுங்கள், ஒருநாள் தானாகவே அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..


2)கழுகு எப்போதும் இறந்த உயிரினத்தின் மாமிசத்தை உண்ணாது.. மாறாக அவை தன் இரையை ஓரிரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக கணக்கிட கூரான பார்வை உடையது..

தன் இரையை உயிருடன் எடுத்து சென்று உண்ணும்..


3)கடும் புயல், தொடர் மழை, இடி, மின்னல் என  எச்சுழலிலும் தன் வாழ்க்கை முறையை மாற்றி துணிவுடன் எதிர் நீச்சல் அடித்து வெல்லும்.

இது போன்று நீங்களும் வாழ்க்கையில் எவ்வித இடர்பாடுகள் வந்தாலும், எதிர் நீச்சலடித்தால் வாழ்வில் வெல்லலாம்..


4)வியூகம் :

கழுகின் எதிரி பாம்பு தான்..

பாம்பிடம் நேரடியாக தரையில் போரிடமால், தன்னுடைய அலகால் பாம்பை தூக்கி க்கொண்டு  மேலே உயரமான மேகக்கூட்டங்களுக்கு மேல் பறந்து சென்று, பாம்பிற்கு பயம் வரவைத்து, சோர்வு மற்றும் பலவீனப்படுத்தி மேலிருந்து கீழே பாம்பை போட்டுவிடும்..

இதுபோன்று உங்கள் எதிரிகளை அவர்களுக்கு பிடித்தமான, பழக்கப்பட்ட  இடத்தில் மோதுவதை தவிர்த்து, உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல்,புது வியூகம் வகுத்து உங்கள் எதிரிகளை வீழ்த்த வேண்டும்..உங்கள் வியூகம் வலுவானதாக இருந்தால், உங்கள்

எதிரிகள்  தானாகவே தோல்வியை ஒப்பு கொண்டு ஓடி விலகி விடுவார்கள்..


5) *சுய உருமாற்றம் பரிணாம வளர்ச்சி* :

பொதுவாக நம் எல்லோருக்கும் கழுகு ஒரு கம்பீரமான பறவை என்று மட்டும் தெரியும். ஆனால், அது எவ்வளவு விடாமுயற்சியுடன் செயலாற்றுகிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கக்கூடிய  விஷயம். கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை. ஆனால், அவற்றிற்கு  சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும்போது உடலில் பலவித மாற்றங்க்கள் நிகழ்கின்றன. நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய்விடும். பலம் பொருந்திய அலகு, இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும். அதற்கும் மேலாகப், பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக்கொண்டு, எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய்விடும்.


இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள் ஒன்று, இந்த வேதனைகள்  பொறுக்க முடியாமல் இறந்து போவது; இரண்டாவது , முடிந்த வரையில் முயன்று பார்த்து, உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது....


வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா? உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டுவிடும். பொறுமையுடன், புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும். பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு, தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும். திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும். அடுத்ததாக, புதிய, கூரிய, வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன், நகங்களாலும், அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும். அடர்ந்த, கறுத்த, பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும். புது அலகு, புது நகங்கள், புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் உருவாகிய  மகிழ்ச்சியில் மேலே உயரே, உயரே பறக்க ஆரம்பிக்கும்…


இது போன்று நீங்கள் வாழ்க்கையில் பல துயரமான, சிக்கல்கள் நிறைந்து வாழ்க்கையில் மீளமுடியாத சூழ்நிலை ஒருவேளை வந்து உங்களை எதிர்கொண்டால்,

கீழ்கண்ட கேள்விகளை உங்களை நீங்கள் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்


"இந்த உலகில் மழை தொடர்ந்து பொய்யப்போவதும் மில்லை, இருள் முழுதும் உலகை கட்டிப்போவதும்மில்லை,

அனைவரும் நல்லவர்களாக இருக்கப்போவதுமில்லை, பசியில்லா உடலும் இல்லை, வலியில்லா மனிதனும் இல்லை,

என்று 

நீங்களே உங்களை

கேள்வி கேட்டு 

நீங்கள் துவர்ந்து விடாமல்,சோர்ந்து விடாமல் நிதானமாக உங்கள் மனநிலையை திடமாக்கி,

உங்களது அன்றாட சிறு சிறு வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செயல்பட்டு வந்தால், உங்கள் பெரும் பிரச்சினைகள், சில நாட்கள் கழித்து உங்களுக்கு சிறியதாக தோன்றும்.. உங்கள் மனம் பலமாகியிருக்கும்,பிரச்சினைகளை கையாளும் விதம் மாறியிருக்கும்,உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு உங்கள் தன்னம்பிக்கை என்ற சிறகால் நீங்கள் வாழ்வில் உயரே பறந்து மற்றவர்களுக்கும்,உங்களை ஏளனமாக பேசியவர்களும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக பேசுமளவிற்கு வாழ்வில் உயர்வீர்கள்...


இவையணைத்தும் கழுகிடமிருந்து

நாம் கற்ற வேண்டியவையாகும்..

திங்கள், 11 ஜனவரி, 2021

காத்திருப்பு

 ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன்

Rahul Dravid ராகுல் டிராவிட் -உரை துளிகள்

 Rahul Dravid அவர்களின் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:

ஓய்வு பெற்ற பொழுது திராவிட் பேசியது
கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் கொடுக்கிறேன்! –பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் திராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது… இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்…ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.

பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு குறித்து:

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.

நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!


பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய ‘காத்திருப்பு’ பற்றிய உரை:
என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,
“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

திலீப் சர்தேசாய் நினைவுச் சொற்பொழிவில் பேசியதன் சுருக்கம்:

என்னுடைய கிரிக்கெட் காதல் என் தந்தை என்னிடம் சொன்ன கிரிக்கெட் சாகசங்களில் இருந்தே துவங்கியது. சுனில் கவாஸ்கர் இருபத்தி ஒரு வயதில் தெளிவான ஆட்டம், கச்சிதமான நுட்பம், நேரான மட்டைப்பிடிப்பு ஆகியவற்றோடு தன்னுடைய முதல் தொடரிலேயே நான்கு சதங்கள், மூன்று அரைச் சதங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்ததை அவர் கண்கள் மின்ன சொல்வார்.

எனக்கு ஒரு தாராப்பூர் கிடைத்ததைப் போலச் சச்சினுக்கு ராம்காந்த் அச்ரேகர் இருந்தார். சச்சினை தன்னுடைய பைக்கின் பின்புறம் வைத்துக்கொண்டு அவரை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆடவைத்த கதை எல்லாம் எங்களுக்குள் சற்று பொறாமையை உண்டு செய்தன. இவர்கள் எல்லாம் எதையும் கைமாறாக எதிர்பார்க்கவில்லை என்பதே ஆச்சரியம் தருகிறது. பெங்களூரில் ஒட்டுமொத்த வலைப்பயிற்சியின் பொழுதும் நின்றுகொண்டு, ஓடிக்கொண்டு, கிரீசை தாண்டி காலை வைக்கும் பந்துவீச்சாளரின் தலைமுடியை பற்றும் பாசாக்கார துரைசாமியை காணலாம். அவருக்கு வயது அதிகமில்லை, எண்பது தான்! நாற்பது வருடங்களாக டெல்லியில் கிரிக்கெட்டை ஒரு தவமாகப் பயிற்றுவித்து வரும் தரக் சிங்கை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் காலத்தில் வீரர்களிடையே இருந்த உறவை சொல்லியே ஆகவேண்டும். இருபத்தி இரண்டு மணிநேரம் கழிப்பறைக்கு அருகில் ரிசர்வ் செய்யப்படாத இருக்கைகளில் ரயில் பயணங்களை அணியினரோடு மேற்கொண்டு இருக்கிறேன். கர்நாடக ரஞ்சி அணி இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில் பயணிக்கும். எங்களிடம் ஐபாட்கள், ப்ளே ஸ்டேஷன்கள், பிறரிடம் பேசாமல் இருக்கச் செய்யும் வாக்மேன்கள் இல்லை. சீட்டு விளையாட்டு, டம்ப்ஷாரட்ஸ், இன்றைக்கு நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத பாடல்களால் நிறைந்த பயணங்கள் அவை.

எண்ணற்ற மூத்தவர்களிடம் இப்படிப்பட்ட ரயில் பயணங்களில் நாங்கள் பல்வேறு பாடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு புது நுட்பமும், பாணியும் புரிந்திருக்கும். ..மும்பை ஆட்டக்காரர்களை ‘khadoos’ என்பார்கள். அதை எப்படி மொழிபெயர்ப்பது? அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?

இந்தச் சொல்லை மொழிபெயர்க்க முடியாதது போல, ஒரு பிள்ளை இந்தச் சொல் குறிப்பதைப் போல மாற நாம் பாடம் நடத்த முடியாது. அதை இதற்கு முன் ஆடிய அனைத்து மும்பை ஆட்டக்காரர்களின் ‘khadoos’ தன்மையைப் பற்றிப் பகிர்வதாலே சாத்தியம். இரு வகையான பந்து வீச்சாளர்களை இடது, வலது என்று மாறி மாறி பேட்டிங் செய்து எதிர்கொண்ட சுனில் கவாஸ்கரின் சாகசத்தைக் கட்டுரைகளும், ஸ்கோர்கார்டுகளும் சொல்லிவிடாது. பேட்டிங்கில் அளப்பரிய திறனை வாய்மொழி பாரம்பரியம் மூலம் ஒரு இளைஞன் கேட்டறியும் பொழுதே இதனைப் பெறமுடியும்.

வாசு ப்ரஞ்சாபே எனும் மும்பையின் கிரிக்கெட் கதைசொல்லி ஹனீப் முகமது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பிராபோர்ன் மைதானத்தில் ஹனீப் மட்டையால் முன்னோக்கி வந்து செய்யும் தடுப்பின் அற்புதமான சப்தம் சர்ச்கேட் வரை எதிரொலிக்கும். அதைக் கேட்டதும் அப்படிப்பட்ட தடுப்புக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

சர்தேசாய் இறக்கின்ற நாள் அன்றுகூட லெக்ஸ்டெம்ப் நோக்கி வரும் ஷார்ட் பாலை எப்படி நான் எதிர்கொள்வது என்று சிசிர் ஹட்டங்காடியிடம் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தார் என்று எண்ணுகிற பொழுது விதியோடு ஒரு போர் நடக்கிற பொழுதும் கிரிக்கெட் அவரின் ரத்தத்தை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது என்று சொல்லத்தோன்றுகிறது.

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன…இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது…அதை மேலும் வளப்படுத்துங்கள்