செவ்வாய், 28 மார்ச், 2023

அதிகாரமிக்க பதவியின் மகிமை

 ஆய்வுக்கு வந்த  தாசில்தார் கிராமத்தின் கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.


அவரைக்காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.

ஒருவர் கயிறைக்கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.


இன்னும் சிலர் சட்டைகளைக்கழற்றி முடிச்சுப்போட்டு கிணற்றுக்குள் விட்டு, ஐயா, இதைப்பிடித்துக் கொள்ளுங்கள்''


எனகத்தினார்கள்.


பெண்கள்  நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.


அந்த  தாசில்தாரை பாதி அளவு மேலே தூக்கிக்கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன், இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.


புது தாசில்தார் வந்துள்ளார். என்றார்..அவ்வளவுதான்...


கிணற்றுக்குள் இருந்த தாசில்தாரை அப்படியே போட்டு விட்டு புது தாசில்தாரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டார்கள்....


அதிகாரம் மிக்க பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்.....