சனி, 3 ஜூன், 2023

இன்றைய போராட்ட நிலை



ஒரு குட்டிக்கதை:


ஒருவன் தன்னுடைய உரிமைக்காக போராடுகிறான்...


உடனே அவனை அரசாங்கம் பிடித்து ஜெயிலில் தள்ளுகிறது..


நான் எனது உரிமைக்காகதானே போராடினேன்? எதற்காக என்னை இங்கு அடைத்து வைத்துள்ளீர்கள் என கத்துகிறான்...


அடுத்து அவனை ஒரு சிறிய அறையில் அடைக்கிறார்கள்...


அவன் மேலும் கோபமுற்று என்னை ஜெயிலில் அடைத்ததே தவறு.... அதிலும் இவ்வளவு சின்ன அறையில் எப்படி அடைக்கலாம் என கத்துகிறான்...


அடுத்து அந்த அறையில் ஒரு கழுதையை கொண்டுவந்து கட்டுகிறார்கள்....


ஐஐயோ இந்த அறையில் நான் இருப்பதே கஷ்டம்...

இதில் இந்த கழுதையுமா ?

தயவுசெய்து இந்த கழுதையை வேறு அறைக்கு மாற்றுங்கள் என கோரிக்கை வைக்கிறான்....


உடனே அந்த கழுதையை வேறு அறைக்கு மாற்றுகிறார்கள்...


இப்போது அவனுக்கு சந்தோசம்..

அந்த அரசு மீது அவனுக்கு கோபம் குறைகிறது..

சிலநாள் கழித்து அவனை பெரிய அறைக்கு மாற்றுகிறார்கள்...


இப்போது அவன் அரசை புகழ ஆரம்பிக்கிறான்...


இந்த அரசு ரொம்ப பரவாயில்ல...


நான் வச்ச ரெண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றிடிச்சு...


கழுதையையும் வேற அறைக்கு மாத்திட்டாங்க...

எனக்கும் பெரிய அறையா கொடுத்துட்டாங்க னு புகழ்ந்து பேச ஆரம்பிச்சுட்டான்...


கடைசியில அவன் எதற்காக போராடினானோ 

எதற்காக ஜெயிலுக்கு போனானோ அது அவனுக்கு மறந்து போச்சு....


இதுதான் இன்று நம்முடைய நிலைமை.....