#கேள்வி: நல்லகாரியங்கள் நடத்துவதற்கு நாள் நட்சத்திரம் பார்ப்பது எப்படி மூடநம்பிக்கையாக இருக்க முடியும்
கலைஞர்:-
வசிஷ்டர் வாயால் பிர்ம்மரிஷி பட்டம் பெறுவது பெரும் பாக்கியம் என்கிறது புராணம். அத்தகைய மகரிஷி வசிஷ்டர் பார்த்துக் கொடுத்த நாளிலேதான் இராமனுக்குப் பட்டாபிஷேகத்துக்கு நேரம் குறிக்கப்பட்டது. ஆனால் அந்த வசிஷ்டர் குறித்த நாளும் நட்சத்திரமும் இராமனை நாடாளச் செய்யாமல் காட்டுக்கல்லவா அனுப்பி வைத்தன.! அதுவும் ஒருநாளா? இருநாளா? பதினான்கு ஆண்டுகள்! காட்டில்தான்
என்ன; சாதாரண கஷ்டங்களா? அந்த இராமன் தனது ஆருயிர் மனைவி சீதையையே அக்னிப்பிரவேசம் செய்து கற்புக்கரசியா இல்லையா என்று சோதிக்க வேண்டிய சூழ்நிலையெல்லாம் ஏற்பட்டுவிட்டதே! எனவே வசிஷ்டர் பார்த்த நாளே வம்பிலே கொண்டுபோய் விட்டு விட்டபோது; பிழைப்புக்காக சோதிடம் பார்ப்பவர்கள் குறிக்கும் நாள் நட்சத்திரங்களால் என்ன பயன் ஏற்படும்? இப்படி கேள்வி கேட்பதுதான் பகுத்தறிவு!