ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ஏகலைவன் துரோணர் கதை:

 Thread Reader

ஏகலைவன் துரோணர் கதை:

கொஞ்சம் பெரிய திரி. முழுவதும் படிங்க!


பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, ஒரு நாள்

பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


பீமன் உதைத்த உதையில் பந்து தூரத்தில் போய் ஒரு பாழுங் கிணற்றுக்குள் விழுந்து விட்டது.


பாண்டவச் சிறுவர்களுக்குப் பந்தை எடுக்கும் வழி


1/N


தெரியவில்லை.

கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபடி நின்றார்கள்.


அந்தப் பக்கம் துரோணர் வந்தார்.

அவர் ஒரு அம்பை செலுத்தினார்.அது ஆழத்தில் இருந்த பந்தில் போய் தைத்தது.இன்னொரு அம்பைச் செலுத்தி முந்திய அம்பில் தைத்தார்.


அதற்குப்பிறகு இன்னொரு அம்பு,இப்படி வரிசையாக அம்புகளைச் செலுத்தி


2/N


கைக்கெட்டும் தூரத்தில் அம்பு நின்ற போது

அந்த அம்புகளை வெளியே எடுத்தார். பந்தும் வெளியே வந்தது. சிறுவர்களிடம் பந்தைக் கொடுத்து விட்டுப் போனார்.


இந்த விவரங்களை பாண்டவர்கள் அவர்களது பாட்டனார் பீஷ்மரிடம் சொல்லவே, அவர் துரோணரை அவர்களுக்கு ஆசானாக நியமித்தார்.


3/N


இதே மாதிரி இன்னொரு நாள் பாண்டவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது

மறுபடியும் பந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.


அப்போது அந்தப் பக்கமாக ஏகலைவன் வந்தான். அவனிடம் பந்தை எடுத்துத் தரும்படி பாண்டவர்கள் கேட்டார்கள்.


ஏகலைவன் அங்கே முளைத்திருந்த ஒரு நீண்ட கொடியை அம்பில் இணைத்து,


4/N


அந்த அம்பை பந்தை நோக்கி எய்தான்.


அம்பு பந்தில் சென்று தைத்தது.

கொடியை வெளியே இழுத்தான்.

பந்து வெளியே வந்தது.


துரோணர் பல அம்புகளைக் கொண்டு செய்த வித்தையை ஏகலைவன் ஒரே அம்பினால் செய்துவிட்டானே என்று பாண்டவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.


அவர்கள் இச்சம்பவத்தைத் துரோணரிடம் சொன்னார்கள்.

5/N


இதைக் கேட்ட துரோணருக்கு ஏகலைவன் மீது அடங்காத பொறாமை ஏற்பட்டது.

கேவலம் ஒரு வேடன் தன்னை விட சிறந்த வில்வித்தை நிபுணன் என்று பெயர் வாங்குவதா? என்று ஆத்திரப்பட்டார்.

அவர் பாண்டவர்களுடன் காட்டுக்கு வந்தார்.


ஏகலைவனிடம் சென்று"நீ வில் வித்தையில் மிகத் திறமைசாலியாமே.உன் குரு யார்?"


6/N


"யாராே துரோணராமே.அவர்தான் என் மானசீக குரு" என்றான் ஏகலைவன்.


"நான் தான் துரோணர். நீ என்னை குருவாக ஏற்றுக்கொண்டதால்

எனக்கு குருதட்சணை கொடுக்க கடமைப்பட்டிருக்கிறாய். ஆகவே உனது வலது கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடு" என்று துரோணர் கேட்டார்.


உடனே ஏகலைவன் தன் கத்தியை எடுத்தான்.


7/N


கீழே குனிந்தான்.

தனது வலது கால் கட்டை விரலை அறுத்து எடுத்து அதைத் துரோணரிடம்

"இதோ உங்கள் காணிக்கை" என்று கொடுத்துவிட்டு ரத்தம் ஒழுகும் காலுடன் அங்கிருந்து அகன்றான்.


"ஏகலைவா! நான்

உனது வலது கை கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்டால்,நீ வலது கால் கட்டை விரலை எமக்கு காணிக்கையாகக்


8/N


கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறாயா? என்று கோபப்பட்டார் துரோணர்.


ஏகலைவன் கேட்டான்.

"குருவே, உங்களுக்கு அர்ச்சுனன் நேரடி சீடன்.

நான் மறைமுக சீடன்.

நீங்கள் அவனிடம் கேட்காத காணிக்கையை என்னிடம் கேட்கலாமா?! தவிர நான் எனது வலது கை கட்டை விரலை வெட்டி உமக்கு கொடுத்துவிட்டால்,


9/N


பிறகு நான் அம்பு எய்வது எப்படி? உங்கள் ராஜகுமாரர்கள் நாடுபிடிக்க வில்லேந்துவார்கள். நான் முயல் பிடிக்கவாவது வில் ஏந்த வேண்டாமா? இந்த வில் இல்லாமல் நானும் என் குடும்பமும் பட்டினி கிடந்து சாவோமே.

அதை நினைத்துப் பார்த்தீர்களா? எவ்வளவு ஈவு இரக்கமில்லாமல் என்னிடம் கை கட்டை விரல்


10/N


காணிக்கை கேட்கிறீர்கள்" என்று பொரிந்து தள்ளினான்.


"நீ ஒரு குரு துரோகி" என்றார் துரோணர்.


"குருவே,சீடனுக்கு குருபக்தி எப்படியோ,

அப்படி குருவும் சீடனிடம் பட்சபாதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். உமது சீடரான அர்ச்சுனனுக்கு ராஜகர்வம்.

உமக்கு பார்ப்பன கர்வம்.

எதற்கு வீண் பேச்சு.


11/N


ஒரு போட்டி வையுங்கள்.

அதில் நான் உங்கள் அபிமான சீடனான அர்ச்சுனனை வென்றுக் காட்டுகிறேன்" என்றான் ஏகலைவன்.


துரோணர் இதற்கு இசைந்தார்.

மறுநாள் அரண்மனை முன்பு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒரு உயரமான பரண் அமைக்கப்பட்டது.


அர்ச்சுனனுக்காகத் துரோணர் அவர்களே,


12/N


அதில் ஒரு கிளியை கால்களைக் கட்டி நிறுத்தச் சொன்னார்.

100 அடி தூரத்திலிருந்து குறி பார்த்து அதன் மீது அம்பு எய்ய வேண்டும் என்பது அர்ச்சுனனுக்காக துரோணர் வகுத்தது.


வில்லில் அம்பை ஏற்றிக் குறி பார்த்த அர்ச்சுனனிடம் துரோணர்"அர்ச்சுனா!நீ எதையெல்லாம் பார்க்கிறாய்?"என்று கேட்டார்.

13/N


"குருவே!அந்தக் கிளியின் கண்ணைத் தவிர நான் வேறு எதையும் பார்க்கவில்லை" என்றான் அர்ச்சுனன்.


"விடு அம்பை"என்றார் துரோணர்.

அர்ச்சுனன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு நேரே கிளியின் கண்ணில் நுழைந்து அதைக் கொன்றது.


போட்டியில் அடுத்து ஏகலைவன் முறை.


ஏகலைவன் பரணில் இரண்டு கிளிகளைக்

14/N


கட்டச் சொன்னான்.

துரோணர் ஆச்சரியப்பட்டார். இவன் என்ன ஒரே அம்பில் இரண்டு கிளிகளையா கொல்லப் போகிறான் என்று வியப்புற்றார்.


ஏகலைவன் சொல்படி பரணில் இரண்டு கிளிகளின் கால்களைக் கட்டினார்கள்.


ஏகலைவன் வில்லில் அம்பைத் தொடுத்து குறிபார்த்தான்.

விர் என்று அம்பு பாய்ந்தது.


15/N


பாய்ந்து சென்ற அம்பு இரண்டு கிளிகளின் கால்கட்டுகளையும் அறுத்துச் சென்றது. இரண்டு கிளிகளும் விடுதலை பெற்று வானத்தில் பறந்தது.


அங்கு கூடி நின்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.


16/17


"அர்ச்சுனா! நீ ஒரு கிளியை அம்பால் கொன்றாய்.

நான் இரண்டு கிளிகளை விடுவித்தேன். யாருடைய திறமை உயர்ந்தது என்பதை உன் குருவான துரோணரே தீர்மானிக்கட்டும்" என்று கூறிவிட்டு

ஏகலைவன் அங்கிருந்து கம்பீரமாக நடந்தான்!


த்தா...யாருகிட்ட! 💪💪


17/17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக