வெள்ளி, 20 ஜனவரி, 2023

பதறாக் காரியம் சிதறாது...

 பதறாக் காரியம் சிதறாது...


அக்பர் ஒருமுறை அவரது அவையில் மிகப்பெரிய கதவு கொண்ட பெட்டகம் ஒன்றை காண்பித்து இது தனித்துவமான கதவுகள் இவைகள் கணித முறைப்படி பூட்டி இருக்கின்றன. அதே கணிதமுறைப்படிதான் இதை திறக்கமுடியும். திறப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்கிறார்.


உடனே அங்கிருந்த அமைச்சர்கள் பலரும் பல கணிதசூத்திரங்களை முயற்ச்சிக்கிறார்கள்.


அந்த கதவை திறக்கிற வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதற்க்கு சாவிகளே கிடையாது. எந்த சாவித்துவாரமும் இல்லை.


பீர்பால் வந்தார். அந்த கதவின் அருகே சென்று உற்று கவனிக்கிறார்.


பின் லேசாக கையை வைத்து கதவை அழுத்துகிறார் கதவு திறந்து கொள்கிறது.


காரணம் கதவு பூட்டப்படவே இல்லை.


கணிதமுறைப்படி என்று சொன்னது அவர்களை குழப்பமடையசெய்ய.


மற்றொன்று.


ஒரு ரயில் பிரயாணம். வண்டி நல்ல வேகத்தில் செல்கிறது. அப்போது ஜன்னல் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன் கையில் இருந்த தங்க மோதிரத்தை வண்டிக்கு வெளியே போட்டுவிட்டது.


அனைவரும் பதறி வண்டியை நிறுத்த முயற்ச்சிக்கின்றனர். ஒருவர் மட்டும் எந்த பதட்டமும் இன்றி அமைதியாக இருக்கிறார்.


சிலர் அவரை திட்டகூட செய்கிறார்கள்.


வண்டி சிறிது தூரம் சென்று நிற்கிறது.


அப்போது அவர் சொல்கிறார்.


இங்கிருந்து 70 வது மின் கம்பம் அருகே உங்கள் குழந்தையின் மோதிரம் கிடக்கிறது. சென்று எடுத்துக் கொள்ளுங்கள் .


மோதிரம் கீழே விழுந்தவுடன் அவர் பதற்றமடையாமல் அமைதியாக மின் கம்பங்களை எண்ண ஆரம்பிக்கிறார். அதனல் தான் சரியாக அவரால் சொல்ல முடிந்தது.


முதலில் பிரச்சனையை வந்தவுடன் பதற்றமடையாதீர்கள். நிதானமாக அதை உற்று கவனியுங்கள். இதைத்தான் பல மேதைகள் செய்கிறார்கள்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக