ஞாயிறு, 8 ஜூலை, 2018

...வீண் பழியும் இலவம் பஞ்சும்...



*நீதிக்கதை*


...வீண் பழியும் இலவம் பஞ்சும்...
ஒரு ஊரில் பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார்.

அவர் ஒரு முறை பெரிய தவறு ஒன்றினை செய்து அதை மறைக்க ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.

பஞ்சாயத்திலும் அந்த கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது.

பின்,

வீட்டிற்கு வந்த பணக்கார ஆசாமியின் மனசாட்சி அவனை மிகவும் பாடாய்படுத்தியது.

கிராமவாசி மீது வீண் பழி சொன்னதை எண்ணி மிகவும் வருந்தினான்.

எனவே,

தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை.

அங்கும், இங்கும் அழைந்து திரிந்து அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான்.

"துறவியாரே!
நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன்.

அது என் மனதை மிகவும் உறுத்துகிறது.

அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து
தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!"
என்று கேட்டான்.

துறவி சிறிது யோசித்துவிட்டு,

"இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு
நாளை வந்து என்னைப் பார்," என்று கூறினார்.

பணக்கார ஆசாமி பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான்.

பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தார்.

"துறவியாரே! நீங்கள் சொன்னதுப் போலவே செய்து விட்டேன்,
என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?"
என்று கேட்டான்.

உடனே துறவி,

பணக்கார ஆசாமி அவர்களே நீங்கள் இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல்.

அவர் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் எடுத்துக் கொண்டு வா,"
என்று கூறினார்.

பணக்கார ஆசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான்.

ஆனால்,

ஒரு விரல் அளவு  பஞ்சு கூட அங்கு இல்லை.

எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது.

அதனைக் கண்ட பணக்கார ஆசாமி திடுக்கிட்டான்.

மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

"துறவியாரே!
நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சு கூட இப்போது அங்கு இல்லை.
என்ன செய்வது?" என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு,

பணக்கார ஆசாமி அவர்களே நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது எப்படி மீண்டும் அள்ள முடியாதோ,

அதே போல,

நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது.

திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும்.

அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது.

இறைவனிடமும் கிராமவாசியிடமும் போய் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,"
இருவரும் உன்னை மன்னித்தால் தான் உன் சுமை தீரும் என்றார்.

பணக்கார ஆசாமிக்கு உண்மை புரிந்தது.

அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான்.

பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்
போவதில்லை என்பதை உணர்ந்தார்?..

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக