இது நாலாந்தர அரசு!*
#கலைஞர்100 முதல்வராக அவையில் வீற்றிருக்கிறார்.
சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் ஹண்டே திமுக அரசைப் பற்றி ”இது மூன்றாந்தர சர்க்கார்” என்று விமரிசித்தார்!
கேட்கவேண்டுமா? ஆளுங்கட்சியினர் கடும் கோபத்தில் கிளர்ந்து எழுந்தனர்!
அனைவரையும் கைமயமர்த்திய கலைஞர், ”டாக்டர் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார்.
அவர் திருத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு *நாலாந்தர அரசு!*" என்றார்.
சபையில் ஒரே சலசலப்பு!
கலைஞர் தொடர்ந்து,
"புரியவில்லையா டாக்டர் அவர்களே?
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நான்கு வர்ணங்களில் நான்காவது வகைப்பட்ட *சூத்திரர்களின் அரசு* இது,” எனத் தெரிவித்தார்!
அப்போது சபையில் சிரிப்பொலியால் ஏற்பட்ட ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று.
இப்படி எதிராளியை நாவன்மையால் திணறடிக்கும் திறமை கலைஞருக்கே உரித்தானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக