துன்பங்களின் போது நீ யார் ?
வாழ்க்கையில் போராடி போராடி துன்பத்தில் வாடிக் களைத்துப் போனேன் என்று சலித்துக்கொண்ட மகனுக்கு, அறிவுரை கூற நினைத்தார் அவனுடைய தந்தை.
அவனுடைய தந்தை, ஒரு சமையல்காரர், அவனை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
மூன்று பானைகளில் தண்ணீரை நிரப்பி ஒவ்வொன்றையும் அதிக நெருப்பில் வைத்தார்.
மூன்று பாத்திரங்களும் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளையும், இரண்டாவது பாத்திரத்தில் முட்டைகளையும், மூன்றாவது பாத்திரத்தில் அரைத்த காபி விதைகளையும் வைத்தார்.
தனது மகனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவனை உட்கார வைத்து விட்டு பாத்திரங்களை தொடர்ந்து கொதிக்க வைத்தார். மகன், புலம்பியபடி பொறுமையின்றி காத்திருந்தான்.
இருபது நிமிடங்களுக்குப் பிறகு அவர் நெருப்பை அணைத்தார். பானையிலிருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தார். முட்டைகளை வெளியே எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தார்.
பிறகு காபியை ஊற்றி ஒரு கோப்பையில் வைத்தார். மகனது பக்கம் திரும்பி "மகனே, நீ என்ன பார்க்கிறாய்?" எனக் கேட்டார்
பொறுமை இழந்திருந்த மகன் வேண்டா வெறுப்பாக "உருளைக்கிழங்கு, முட்டை காபி," என்று அவசரமாக பதிலளித்தான்.
"உருளைக்கிழங்கைத் தொட்டுப்பார்." என்றார், அவன் தொட்டுப் பார்த்தான், அவை மென்மையாக இருப்பதாகக் கூறினான்.
ஒரு முட்டையை எடுத்து உடைக்கச் சொன்னார், அவன் உடைத்துப் பார்த்தான், அது கடினமாக இருப்பதாகக் கூறினான்.
கடைசியில் காபியை பருகச் சொன்னார். அதன் நறுமணம் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
"அப்பா, இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?" எனக் கேட்டான்.
உருளைக்கிழங்கு, முட்டை, காபி விதை எல்லாமே கொதிக்கும் நீர் எனும் ஒரே துன்பத்தையே எதிர்கொண்டன ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மாற்றங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன
வலுவாகவும், கடினமாகவும் இருந்த உருளைக்கிழங்கு கொதிக்கும் நீரில் இடப்பட்டதும் மென்மையாகவும் பலவீனமாகவும் மாறியிருக்கிறது.
உடையக் கூடியதான மெல்லிய வெளிப்புற ஓட்டினால் அதன் திரவ உட்புறத்தை பாதுகாத்த முட்டை கொதிக்கும் நீரில் போட்டதும் கடினமாக மாறியிருக்கிறது.
வெளியே தனித்தனியே இருந்த காபி விதைகள் கொதிக்கும் நீரில் இட்ட பிறகு, தண்ணீரின் தன்மையையே மாற்றி புதிய பாணம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது
"மகனே நீ யார்"
“துன்பங்கள் உன் கதவைத் தட்டும்போது, அவற்றுக்கு நீ எப்படிப் பதிலளிப்பாய்?
உருளைக்கிழங்காகவா ? முட்டையாகவா ?அல்லது அரைத்த காபி விதையாகவா ?
வாழ்க்கையில், நம்மைச் சுற்றி நடக்கும் துன்பங்கள், #நமக்கும் ஒரு நாள் நடக்கும், ஆனால் அவற்றால் #நமக்குள் என்ன நடக்கிறது என்பது மட்டும்தான் முக்கியமானது ஏனெனில் அவை தான் விளைவுகளைத் தீர்மானிக்கும்
#பிரதி செய்யப்பட்டது#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக